23 ஆக., 2012

உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சுஷ்மாவுடன் சந்திப்பு

புதுடெல்லி, ஆக.23,

நிலக்கரி சுரங்க ஊழல் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலகவேண்டும் என கூறி பா.ஜ.க. எம்.பிக்கள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் தொடர்ந்து 3-வது நாளாக கூச்சலில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் செயல்படமுடியாத நிலையில் உள்ளது.

பிரதமர் இதுகுறித்து விளக்கமளிக்க தயாராக இருப்பதாகக் கூறியும் அதை ஏற்பதாக இல்லை. பாஜனதா கூட்டணி கட்சிகளான ஜக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் பாரதீய ஜனதா மட்டும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற அவை முன்னவரும், உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.

அப்போது பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அழைக்குமாறு சுஷ்மாவை உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக