7 ஆக., 2012

இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது;அன்னா ஹசாரே அதிரடி



ஊழலுக்கு எதிரான அன்னா குழு கலைக்கப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை எனவும், இதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும் பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாவடேகர், ‘’அன்னாகுழு கலைப்பு நடக்கவேண்டிய ஒன்றுதான். அன்னா குழு இப்போது தங்கள் போராட்டைத்தைக் கைவிட் டுள்ளது. அவர்களது உண்ணாவிரதம் முடிந்துவிட்டது. அதனால்தான் அக்குழு கலைக்கப்பட்டுள்ளது.

அன்னா குழு இப்போது அரசியலில் குதிக்க உள்ளது என்றார். எனினும் அரசியல் அரங்கில் அன்னா குழுவி னரின் வெற்றிவாய்ப்பு பற்றி ஜாவடேகர் நம்பிக்கை தெரிவிக்கவில்லை.

அதுபற்றி பேசிய அவர், ‘நாட்டில் 500-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் சில கட்சிகளின் பிரதிநிகள் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல் படுகின்றனர்.

ஆனால் கட்சி துவங்கவும், தேர்தலில் போட்டியிடவும் ஒவ்வொருவருக்கும் அதிகாரமுள்ளது.’ என்றார்.

மேலும், ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதா கோரியும் நீண்டகாலமாக பாரதீய ஜனதா போராடி வருகிறது எனவும், இதே நோக்கங்களுக்காகவே அன்னா குழு தோற்றுவிக்கப்பட்டதாகவும் ஜாவடேகர் கூறியுள்ளார்.

'வர இருக்கும் பாராளுமன்ற தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்’ எனவும் ஜாவடேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரித்த மத்திய அரசு, அதனை மக்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவினால் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது என்று மீண்டும் போராட்டக் களத்தில் குதித்த ஹசாரே, சமீபத்தில் டெல்லியில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதேசமயம் தான் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார்.


இந்நிலையில், அன்னா ஹசாரே குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சி யையும் அவர் கைவிட்டார்.

இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட அன்னா ஹசாரே, ‘லோக்பால் சட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. நாங்கள் எத்தனை காலம், எத்தனை முறைதான் உண்ணாவிரதம் இருப்பது?.


உண்ணாவிரதத்தை விட்டு அதற்கு பதிலாக வேறு வழிகளில் போராடுமாறு மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்.

நானும் இந்த அரசு ஊழலை கட்டுப்படுத்தப் போவ தில்லை என நினைக்கிறேன்.

அன்னா குழு நடவடிக்கைகளை நாங்கள் இன்றுடன் நிறுத்திவிட்டோம். லோக்பால் மசோதா நிறைவேற்றம் பற்றி மத்திய அரசுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். இன்றுமுதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது’ என்று கூறியுள்ளார்.
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக