1 ஆக., 2012

அமைச்சரவை மாற்றம்: ஆளுங்கட்சியில் திறமையாளர்களுக்குப் பஞ்சம்: பாஜக

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிய அளவிலான மாற்றம் பரிதாபகரமாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. 
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிய அளவிலான மாற்றம், ஆளுங்கட்சியில் திறமையாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதை தெளிவாக உணர்த்துகிறது. இந்த மாற்றம் பரிதாபகரமாக இருக்கிறது. நிதியமைச்சராக சிதம்பரத்தின் பங்கு கேள்விக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. அவரது குடும்பத்தார் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் ஒரு மாற்றத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வு இல்லை. அதனுடைய செயல்திட்டத்தில் நல்லாட்சி என்பது இடம்பெறவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் மின்தொகுப்புகள் செயலிழந்து கிடக்கும் நாளில் அத்துறை அமைச்சர் ஷிண்டே, உள்துறைக்கு மாற்றப்பட்டிருப்பது வேடிக்கையானது. இந்த நாளில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் கேலிக்கூத்தானது என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக