6 ஜூலை, 2012

சொத்துக்குவிப்பு வழக்கில் மாயாவுக்கு நிம்மதி...

  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு ரத்து

புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் ஏதுமில்லை என கூறி, அவர் மீதான வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் அவர் பெரும் நெருக்கடியில் இருந்து தப்பினார்.

உத்திரபிரதேச மாநில முதல்வரும் பகுஜன்சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி ( 2004 - 2008 ) முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.,ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாயாவதி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை டில்லி கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மாயாவதி சொத்துக்கள் குவித்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், இவ்வழக்கில் சி.பி.ஐ., தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், இதனால் மாயாவதிக்கு பெரும் நிம்மதி கிடைத்தது.

சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 111 கோடி : கடந்த ராஜ்யசபா தேர்தலில் மாயாவதி தனது சொத்து மதிப்பு மொத்தம் 111 கோடி என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வருமான வரித்துறை எவ்வித பிரச்னையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய தேர்தலில் மாயாவதி தனது சொத்துப்பட்டியலில் காட்டிய விவரம் வருமாறு: 380 கியாரட் வைரம் , ஒரு கிலோ தங்கம், 20 கிலே எடை கொண்ட வெள்ளியிலான சமையல் பாத்திரங்கள், அசையா சொத்துக்கள் 96 கோடிக்கு உள்ளது.


உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மாயாவதி வரவேற்றுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 
நன்றி தினசரிகள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக