19 ஜூன், 2012

இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது!


தி.மு.க. தலைமைக்கழகம்! 
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை, மாவட்ட செயலாளர்களை, அடக்குமுறைகளை வீசியே தகர்த்து விடலாமென்று எண்ணி செயல்படுகின்றது.
அட்டகாசத்தின் உச்சகட்டமாக நெருக்கடி கால கொடுமைகளையும் அராஜக அரசுகளின் பூதாகர பொய் வழக்குகளையும் சந்தித்து தியாகத்தழும்பு பெற்ற தி.மு.க. தளபதிகளில் ஒருவரும், தி.மு.க.வை கட்டிக் காக்கும் தீரர்களில் ஒருவருமான சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது ஜெயலலிதா குண்டர் சட்டத்தை ஏவியுள்ளார்.

அது போலவே மதுரை மாநகர மாவட்ட செயலாளர் தளபதியை 2 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்த பிறகு, நேற்று வேறு ஒரு வழக்கை அவர் மீது திணித்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய கொடுமைகளை ஜனநாயகத்திலும், அறவழியிலும் நம்பிக்கை கொண்டுள்ளதும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணாவின் பொன்மொழியின் வழியை பின்பற்றி நடப்பதுமான தி.மு.க. இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வீண்பழி சுமத்தும் படலத்தை, தமிழகம் இனியும் தாங்காது. இந்த செயலை கண்டிப்பதற்கு எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்க தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் 22 6 2012 அன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக