19 ஜூன், 2012

வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது!




வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது!
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் மாகாளி உத்தரவு!

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்து வருபவரும், மூன்று முறை மாநில அமைச்சராக இருந்தவரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (74) மீது ஏற்கனவே சேலம் அங்கம்மாள் காலணி நிலஅபகரிப்பு வழக்கு, நிலவாரப்பட்டி பாலமுரளி என்பவரின் நிலஅபகரிப்பு வழக்கு, கோயம்பத்தூர் நகைக்கடை உரிமையாளர்களின் நிலஅபகரிப்பு வழக்கு, பிரிமியர் மில் நிலஅபகரிப்பு வழக்கு, வேளாண் பொறியியல் துறை கூட்டுறவு சங்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனது உறவினர்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதற்கான நிலஅபகரிப்பு வழக்கு என ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 2012 ஜூன் 2ஆம் தேதி சேலம் அங்கமமாள் காலணியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைக்க தூண்டியதாக வழக்குப் போடப்பட்டது.

குடிசை எரிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் விசாரணை 19.06.2012 அன்று வரவுள்ள நிலையில், இன்று (18.06.2012) இரவு 8 மணிக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையர் மாகாளி, வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்திடம் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ததற்கான உத்தரவை, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இமானுவல் ஞானசேகரன் ஆகியோர் வேலூர் சிறைக்குச் சென்று கொடுத்தனர்.

ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு விசாரணைக்கு 19.06.2012 அன்று வரவுள்ளது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்துவிடுவார் என்று அவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தை போட்டுள்ளனர் என்று சேலம் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நன்றி நக்கீரன்:

இது எதிர் கட்சிகளுக்கு விடும் சவாலா இல்லை செக்கா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக