17 ஜூன், 2012

மதுரை ஆதீனம் எனக்கு பக்க பலமாக இருப்பார்: நித்யானந்தா பேட்டி


மதுரை ஆதீனம் எனக்கு பக்க பலமாக இருப்பார்: நித்யானந்தா பேட்டி

மதுரை, ஜுன். 16- 
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பீடதி ஆசிரமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வன்முறை ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து நித்யானந்தா மீது வழக்கு தொரடப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு நித்யானந்தா சார்பில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு மாஜிஸ்திரேட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். இதை தொடர்ந்து அவர் நேற்று இரவு 9 மணி அளவில் மைசூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். இன்று காலை 5.30 மணி அளவில் மதுரை ஆதீன மடத்திற்கு நித்யானந்தா வந்தடைந்தார். அங்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டார். அவருடன் பல சீடர்களும் பூஜையில் கலந்து கொண்டனர்.  

மதுரை, ஜூன் 17- 

கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வன்முறை நடந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து நித்யானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் நேற்று முன்தினம் இரவு வெளியே வந்தார். அதன் பிறகு மைசூரில் இருந்து கார் மூலம் நேற்று காலை மதுரை ஆதீன மடத்திற்கு வந்தார். 

அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் ஆதீனம் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது நித்யானந்தாவை மறு... மறு...மறு... என்று 3 முறை கூறி மறுபிறவி எடுத்ததுபோல இருக்கிறது. இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஆதீனம் கூறி நித்யானந்தாவை மடத்திற்குள் அழைத்து சென்றார். 

ஆதீன மடத்தில் வழக்கமாக பகலில் நடைபெறும் பூஜையை நேற்று இளைய மடாதிபதியான நித்யானந்தா நடத்தினார். இதில் பல பக்தர்களும், சீடர்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது நித்யானந்தா கூறியதாவது:- 

பிடதி ஆசிரமத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உள்ளூர் டி.வி. சேனலை சேர்ந்த ஒருவர் லீகல் நோட்டீசை கொண்டு வந்து கொடுத்தார். நான் வாங்க மறுத்து இது பத்திரிகையாளர் சந்திப்பு. முறையாக தபால் மூலமோ அல்லது வக்கீல் மூலமோ கொடுத்து அனுப்புங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். உடனே நீங்கள் வெளியே செல்லுங்கள் என்றேன். இதை வேறுவிதமாக கூறி தாக்கி விட்டதாக புகார் செய்துள்ளார்கள். 

அமெரிக்க பெண் ஆர்த்தி கொடுத்த செக்ஸ் புகார் குறித்து கேட்டதற்கு, அந்த பெண் கொடுத்த புகாரில் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. பிடதி ஆசிரமத்தில் விரும்பதகாத சம்பவம் ஏதும் நடக்கவில்லை. ஆசிரமத்திற்குள் அங்குள்ள போலீஸ் சூப்பிரண்டே நேரில் சென்று சோதனை நடத்தி ஏதும் இல்லை என்று கூறி இருக்கிறார். 

ஆசிரமம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டு வருகிறது. எனக்கு மதுரை ஆதீனத்தின் பூரண ஆதரவு இருக்கிறது. இளைய மடாதிபதியாக நித்யானந்தா நீடிப்பார் என்று கூறி இருக்கிறார். எனக்கு அவர் எப்போதும் பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் இருப்பார். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி மாலைமலர்...

இன்னும் இவர் நாடகம் முடியவில்லையா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக