20 ஜூன், 2012

சகுனி திரைப்படம் ஒரு பார்வை...


 
இது சகுனி வேலையா இல்லை உண்மையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று கூறுகிறார்கள் அஜித் ரசிகர்கள். பெயருக்கேற்ப சகுனி டீம் சகுனி வேலையில் இறங்கிவிட்டா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள் சகுனி ரசிகர்கள். இது குறித்த செய்தி :

அஜீத் நடிப்பில் தயாராகி, அடுத்த வாரம் வெளியாகவிருந்து, பின்னர் தள்ளிப் போயுள்ள பில்லா 2-ன் தெலுங்கு விற்பனை உரிமையை விட அதிக விலைக்குப் போயுள்ளது கார்த்தியின் சகுனி படம்.

தெலுங்கில் ஆரம்பத்திலிருந்தே கார்த்திக்கு நல்ல வரவேற்பு. சகுனி அவரது ஆறாவது படம். இப்போதே பெரிய நடிகர்கள் வரிசைக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சகுனி படத்தைப் பொறுத்தவரை, எல்லாமே பக்கா திட்டமிடலோடு நடக்கிறது. படத்தைத் தொடங்கியதிலிருந்து, முடித்து சென்சாருக்கு அனுப்பி, ரிலீஸ் தேதி அறிவித்தது வரை எந்தத் தடுமாற்றமும் இல்லை

பில்லா 2ம் சகுனியும் ஒரு நாள் இடைவெளியில், அதவாது ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் வெளியாவதாக இருந்தன. ஆனால் கடந்த வாரம் சென்சாருக்குப் போன பில்லா 2-க்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. அத்துடன் படத்திலிருந்து பல வன்முறை காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர் அதிருப்தியில் உள்ளார்.

இப்போது ‘பில்லா 2′ திரைப்படத்தின் வெளியீடு எந்தவித அறிவிப்பின்றி தள்ளிப்போய்விட்டது.


பில்லா 2. பட வெளியீடு இந்த மாத இறுதியிலா... அடுத்த மாதமா என்று தெரியாத நிலை.

இது சகுனிக்கு ரொம்ப சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதற்கு முன் கார்த்தி என்ன... சூர்யாவின் படமே தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்!

தியேட்டர்காரர்கள் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு காம்ப்ளெக்ஸ் மட்டுமே ரூ 30 லட்சத்தை இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளதென்றால் சகுனி ஆனால் சகுனி திரைப்படம் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.


சகுனி படம் வெற்றி பெற வாழ்த்துவோம் 

சகுனி பாடல் வரிகள்


மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

1 கருத்து:

 1. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


  Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை
  மேலும் விபரங்களுக்கு  http://www.tamilpanel.com/  நன்றி

  பதிலளிநீக்கு