6 ஜூன், 2012

வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்


வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்சேலம் அங்கம்மாள் காலனி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 
இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தை சென்னை யில் கைது செய்த போலீசார், சேலம் கொண்டு சென்ற போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். 


18-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாதுகாப்பு வசதிகள் சரியாக இல்லாத காரணத்தால் அவரை புழல் சிறைக்கு கொண்டு வந்து நேற்று காலையில் அடைத்தனர். 
இந்நிலையில் காலை 8 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகம் திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப் பட்டார். பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் புழல் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் அழைத்துச் செல்லப்பட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக