19 ஜூன், 2012

சசிகலா ஆஜர் ஆகாததால் வழக்கு தள்ளிவைப்பு

பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜர் ஆகாததால் வழக்கு தள்ளிவைப்பு..
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடிக்கடி ஆஜராக விலக்கு கேட்கக்கூடாது என்று சசிகலா வக்கீலை நீதிபதி கண்டித்தார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களுர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா ஆஜராகாமல் இருக்க அவரது வழக்கறிஞர் கந்தசாமி மனு கொடுத்தார். அதை நீதிபதி மல்லிகார்ஜுனய்யா ஏற்றுக்கொண்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேர் சார்பிலும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பதற்கு விலக்கு அளிக்க கோரி அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.

உடனே நீதிபதி, சசிகலா வராததற்கு காரணம் என்ன? என்றார். ‘கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் 10 நாட்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் வரவில்லை என்று வழக்கறிஞர் மணிசங்கர் கூறினார். சுதாகரன் முதுகுவலி காரணமாகவும், இளவரசி நீரிழிவு நோய் காரணமாகவும் ஆஜராக முடியவில்லை என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தனர். அதை பெற்ற நீதிபதி, ‘Ôசொத்து குவிப்பு வழக்கை தினமும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.

ஆனால் அடிக்கடி இதுபோல் மனு கொடுத்து காலம் தாழ்த்தப்படுகிறது. விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்று அனைவரும் ஆஜராக வேண்டும்ÕÕ என்று கண்டிப்புடன் கூறினார். இந்த வழக்கில் ஏற்கனவே சசிகலா 600 கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். இன்னும் 600க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடநாட்டில் சசிகலாtamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
குன்னூர் :நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கோடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர். கடந்த வாரம், கோடநாடு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சசிகலா கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் சசிகலா, கோடநாடு எஸ்டேட் வந்துள்ளார்.

நன்றி தமிழ்முரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக