1 ஜூன், 2012

அருகம்புல் கவிதை...அருகம்புல்லே!
நீ அருகிலிருந்ததால் 
உன் அருமை 
எனக்கு தெரியவில்லை..


உனக்குள் இருக்கும்
மகத்துவம் 
மருத்துவம் பற்றி 
அறிய மனம் நாடவில்லை...


நீ ஏழை வீட்டு 
மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்கவில்லையா ?
ஏற்க மனம் வரவில்லையா ?


உன்னை பறித்து 
அரைத்து பாலோடு பருகினால் 
உடலுக்கு நல்ல ஊட்ட சத்து 
வருவதுவுண்டு.
வெட்டுக்காயத்தை 
தடுக்கும் குணமுண்டு...உன்னை அரைத்து 
தேனோடு ஏலக்காய் 
சேர்த்து பருகினால் 
ரத்தம் சீராக்கி 
உறுப்புகளை 
பாதுகாக்கும் படை 
வீரன் அல்லவா நீ நீ எங்கள் வீட்டுத் தோட்டத்து 
இலவச மருத்துவமணி 
உன்னை கவனி 
என சொல்லும் 
மருத்துவ மாமணிகள்
அடித்த மணிக்கு பின்னே...


உன் வலிமை 
அருமை ,அறிந்தேன்.
உணர்ந்தேன்...


இனி உன்னை பயிறுடுவேன்.

வளர்ப்பேன்.
உனக்கும் என் மனதில் 
இடம் தருவேன்.
உடலுக்கு வளம்
பலம் சேர்ப்பேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக