5 ஜூன், 2012

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது


முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்க நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி காவல்சரகத்தில் குட்டிக்கரடு மலை அரசுக்கு சொந்தமான குவாரியில் அனுமதியின்றி கற்களை உடைத்து எடுத்துச் சென்றதாக கிராம நிர்வாக அலுவலர் பரஞ்சோதி புகார் அளித்திருந்தார். 


இதுதொடர்பான வழக்கில் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலர் பி.சி.முரளிதரன் முரளிதரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 வது எதிரியாக ஐ.பெரியசாமி சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக தம்மை போலீசார் தேடுவதை அறிந்த பெரியசாமி, திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்றார். 


இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வேடசந்தூர் வட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று 6 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்குமாறு நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அனுராதா உத்தரவிட்டார்.


நன்றி நக்கீரன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக