14 ஜூன், 2012

அடம்பிடிக்கிறார் அருணகிரிநாதர்...
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடைபெற்ற மோதல் தொடர்பாகவும், அமெரிக்க பெண் சீடர் ஆர்த்திராவ் கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகளால் நித்யானந்தா கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்,    ‘’இளைய ஆதீனம் நித்யானந்தா மீது வேண்டுமெ ன்றே பொய் குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகிறது. இப்போது புனையப்பட்ட பொய் வழக்கு களால் நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்குரிய நியாயத்தை நீதிமன்றத்தில் தெரி வித்து பரிகாரங்களை செய்ய தயாராக உள்ளார்.
நித்யானந்தா தனது வழக்குகளை சட்டப்படி சந்தித்து நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிப்பார். நித்யானந்தா சைவ வேளாளர் பிரிவை சேர்ந்தவர். அவரை மதுரை இளைய ஆதீனமாக நியமித்தது “திடீர்” முடிவுதான். ஆனாலும் அவர் அதற்கு முழு தகுதியானவர்.
மதுரை ஆதீனத்தில் ஆட்கள் பலம் இல்லை. பல கோடிகள் சொத்துக்கள் உள்ள மதுரை ஆதீன மடத்தை நல்லமுறையில் நிர்வாகம் செய்ய நித்யானந்தாவால் மட்டுமே முடியும் என்பதை சிவபெருமான் எனக்கு உணர்த்தி உள்ளார்.
இறைவனின் கட்டளைக்கு பணிந்து தான் 293-வது இளைய ஆதீனமாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நித்யானந்தாவை கைது செய்துள்ளதால் குற்றவாளி என சொல்ல முடியாது. எனவே மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் எந்த மாற்றமும் இல்லை. 

நான் யாருடைய அச்சுறுத்தலுக்கும், வற்புறுத்தலுக்கும், விருப்பத்திற்கும் ஆளாக மாட்டேன். மதுரையில் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். ஆதீன மடத்தில் நான் வழக்கம்போல் பூஜைகளை செய்து வருகிறேன். 

மதுரை இளைய ஆதீனமாக நல்லமுறையில் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் பெற்ற  நித்யானந்தா சாமிக்கு இன்னும் ஆதரவு உண்டு என்று தன் பங்கு சொல்லி அடம்பிடிக்கிறார் அருணகிரிநாதர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக