1 ஜூன், 2012

அச்சமில்லை...









அச்சமில்லை அச்சமில்லை...
உன் வாழ்விலே!


வரும் கஷ்டமெல்லாம் 
ஓடிப்போகுமே...

வஞ்சமில்லை வஞ்சமில்லை 
உன் வாழ்விலே...


நீ உறுதியோடு எதிர்த்து போரிட்டால் வெற்றி உன் வசமே...



வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம் 
நடுங்கி ஓடிடுமே...



பயமில்லை பயமில்லை 
வாழும் வாழ்விலே...


மலையென எரிமலையென  
நீ எழுந்தால் போதுமே...


தோல்விகள் கூட உன்னை கண்டு 
தோற்று போகுமே...



அச்சமில்லை அச்சமில்லையே
என நீ துணிந்து நின்றாலே ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக