11 மே, 2012

காதலுக்கு கண்ணில்லை...
காதலுக்கு கண்ணில்லை
என்று கூறியே 
கண்டதும் காதல் என்று
வாசிக்கும் வாலிப இதயம்...


அவள் காதல் கொள்கிறாளா
தேவையில்லை
நான் காதலிக்கிறேன்
தெய்வீக காதல் என முழக்கம்

ஏச்சுக்கும் ,பேச்சுக்கும்,கிடையில்,
மூச்சுக்கு முந்நூறு தடவை
தினம் அவள் பெயரை
கூறுவதே இவன் வேலை .

சரி இப்படி சொல்கிறானே என்று
அவளை கண்டு கேட்டேன்,
அவள் சொன்னாள்
யார் இவன் என்று.

என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதலிக்க வேண்டுமென்றால்
எனக்கு ஓராயிரம் காதலன் .

எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்
நான் கண்டுகொள்வதில்லை.

உண்மை காதல் என்று சொல்வது எல்லாம்
உளறல் என்று கொள்க .
காலம் கடந்தால்
அடுத்தக் காதல் வரமாலா போகும் .

திரைப்படத்தின் ஆதிக்கத்தால்
இங்கு காதல் எனபது வாலிபத்தின்
கட்டாயக் கல்வியாய் மாறிவிட்டது,

பெண்கள் இதில் பொறுப்பேற்க முடியாது,
என்று முழங்கினால் அவள்.
அவள் கூற்றுக்கு பதில் என்னிடமில்லை.

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் சாதலும் சாபமாய் போக
புரிதலும் .அறிதலும்
தெரிந்துக்கொள்ளாமலே!

 இங்கு தெய்வீக காதல் என முழக்கம் இன்னும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக