10 மே, 2012

பில்லா 2 திரைப்படம் ஒரு பார்வை...,பில்லா ரஜினி நடித்து சக்கைப்போடு போட்ட படம்...
ரஜினிக்கு ஒரு நிரந்தர மார்கெட் தந்த திரைபபடம் இந்த பில்லா...

இதே போல அஜித்துக்கும் ரீமேக் பில்லா திரைப்படம் புதிய மாற்றத்தைதந்தப் படம் என்றால் பொய்யில்லை...


மங்காத்தா வெற்றிக்கு பின் வரும் படம்,இந்த பில்லா இரண்டுக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடிவுள்ளது உண்மை...


பில்லா பற்றி பல சுவையான செய்திகள் இணையத்தில் வந்த வண்ணமாய் இருப்பது,இந்த பில்லாவுக்கு இன்னும் ஒரு படி எதிர்பார்ப்பு கூடிவிட்டது...!கூட்டிவிட்டது...!


தல அஜித் பற்றிய செய்திகள் அவரின் செயல்கள் என்று தினம் 
தினம் ஒரு செய்திகள்...


தலை பற்றி வந்த வண்ணமாய்...

பில்லா 2 படக்குழுவினர் எப்பொழுது பார்த்தாலும் அஜீத் குமார் புராணம் தான் பாடி வருகின்றனர்.


தல அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்புக்கு சென்றால் யாரைப் பார்த்தாலும் தல போல வருமா என்று தான் பேசிக்கொள்கிறார்கள். 


என்னங்கையா தல டைலாக்கை சொல்றீங்க என்று கேட்டால், ஆஹா, ஓஹோ என்று அஜீத்தை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாத குறையாக புகழ்பாடுகிறார்கள். அப்படி தல என்ன மாயமந்திரம் செய்தார் என்றால் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கத் தேவையான உதவிகளை அஜீத் செய்து வருகிறாராம்.(இது தானே முக்கியம் )


மேலும் படத்தில் பார்வதி ஓமனகுட்டன், புருனா அப்துல்லா என்று தமிழ் தெரியாத 2 நாயகிகள். அவர்களுக்கு தமிழ் வசன உச்சரிப்புகளை கற்றுக்கொடுக்கிறாராம். 


இது தவிர படக்குழுவினருக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறாராம். அதனால் தான் இந்த புகழாரம் எல்லாம்.


முன்னதாக பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு இல்லாமல், சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தல என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படியான செய்திகளால் தல தல தான் என்று படக்குழுவினர்
புகழ் பாடல்கள்....


ஒரு பெரிய நடிகர் எந்த பந்தா சிறிதும் இல்லாமல் ஓடி, ஓடி உதவி செய்வதால் படக்குழுவினர் உருகுகின்றனர்.


என்ன இருந்தாலும் தல தல தான்...புகழ் மாலை தான்...

அஜித் நடிக்கும் பில்லா 2 வின் தகவல்கள் ஆன்லைனில் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன.


மறு பக்கத்தில் பில்லா 2 விற்கென அஜித் செய்த ஸ்டன்ட் வரவேற்பை பெற்றுள்ளது.


கரணம் தவறினால் மரணம் என்ற அளவுக்கு அஜித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக பில்லா 2 ஸ்டன்ட் பயிற்சியாளர் சமூக தளத்தில் ஏகத்திற்கு புகழ்ந்துள்ளார்.


எனது வாழ்நாளில் இப்படியொரு ஸ்டன்ட்டை பார்த்ததில்லை எனவும் அஜித் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஒரு கையால் கயிற்றைப் பிடித்து தொங்கிய காட்சி எனது இரத்தத்தை உறைய வைத்துள்ளது எனவும் பயிற்சியாளர் கூறியுள்ளார்.


பில்லா2 நம்மை எப்படி மகிழ்விக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
பில்லா2 வெற்றியடைய வாழ்த்துவோம்...

2 கருத்துகள்: