13 ஜன., 2012

முதிர் கன்னிகள் ...


ராகு
கேது
வில்லனாய் போக

நிமிடம் 
நேரம் 
காலம்
என 
கழித்து 
கூட்டி 
பெருக்கி 
வகுக்கப்படுகிறது 
நல்லக் காலம் கேட்டு...

சந்தோஷம் தரும் 
பெண்ணுக்கு 
செவ்வாய் தோஷமாம்...


தாயாய் மாறும் 
தாரத்துக்கு
தட்சணையாம்...


கனவுகளும் 
கணிப்புக்களும் 
புறக்கணிப்பதால் 
இன்னும் 
முதிர் கன்னிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக