18 ஜன., 2012

பேருந்து நிறுத்தம்...


காதல் வாகனத்தை 
எதிர்ப்பார்த்து
விழிகளின் விசாரிப்பு 
ஆர்பரிக்கும் கூட்டத்தில்
நிலவுகளின் பங்களிப்பு 

பாவாடை 
தாவணியும்
சுடிதாரும் 
ஜீன்ஸ் 
டிஷர்ட் 
புடவைகளின்,
வண்ணமய  அணிவகுப்பு

பூமியாய் சுற்றி 
வரும் காளையர்களின் 
தவிப்புகளுடன் 

காலை நேர 
எங்கள் ஊர்
பேருந்து நிறுத்தம்...

2 கருத்துகள்: