6 ஜன., 2012

சந்தோஷ யுத்தம்..


முத்தம்.
சத்தமில்லாத 

சந்தோஷ 
யுத்தம்..

முத்தத்தோடு தொடக்கம் 
முழு மதியாய்
முகத்தில் உற்சாகம்
உறவுக்கு உத்வேகம்

பிழைகளுக்கு
மருந்தாகும்,
பிள்ளைகளுக்கு 
மகிழ்ச்சியாகும்.

முத்தம் 
முன்னுரையாகும்
முயற்சிக்கும்
வெற்றிக்கும்
பரிசாகும்...

முத்தம் 
வாழ்க்கையோடு 
அங்கம்...


அன்பின் உருவம் 
அன்னையின் 
முத்தத்தில் 
கோபமும் 
உருகிப்போகும்



மனைவி தந்த 
முத்தத்தில்
சினம் கொண்ட 
மிருகமும்  
சின்னாபின்னமாகும் 
அனைத்தும்
அடங்கிப்போகும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக