12 டிச., 2011

மோர்....கவிதைகள்!


பசு தந்த பால்
கடைந்து 
முட்டி மோதி
அவதாரங்கள் 
பலக்கண்டு 
இறுதில்
மோராகிப் போனது
பாலின் முகவரி 
மாறித்தான்  போனது.

நண்பர்களுக்கும்
வந்தவர்களுக்கும்
தாகம் தீர்க்கும்
குளிர்ப் பானமாய் 

கோடைகாலத்தில்
ஒன்ஸ் மோர் என
கேட்கும் நிலைக்கு 
புது வரவாய்
வரமாய் போனது!

1 கருத்து: