5 டிச., 2011

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

கொலைவெறி 
தமிழன் பாடிய 
பாட்டு 
பிரபலம்...


உலக கலைவுலகம் 
கலக்கம்
இந்திய திரைக் களமும் 
கறையை பூச 
தொடக்கம்...


அறிவு ஜீவிகளின் 
பட்டி மன்றம் 
பாட்டை பற்றிய 
விவாதம் 
தொடக்கம்...


தமிழன் என்றாலே 
இளக்காரம் 
இந்திய சினிமாவின் 
அவதாரம் ...


இதற்கு உதாரணம் 
நடிகர் திலகம் ...


இந்திய சிறந்த 
நடிகர் என்ற 
அங்கீகாரம் 
கொடுக்காததை 
இன்றும்  சொல்லும்...


இந்த வகையில் 
தொடரும் 


இந்த பாட்டை மட்டும் 
எப்படி ஏற்கும்...!


குரைக்கும்
குறை சொல்லி 
குறிவைத்து தாக்கும் 


இது காலம் 
காலமாய் நடக்கும் 
உண்மையின் 
நிலையாகும் 


இன்று
கொலை வெறியும் 
இதில் அடக்கம்...
இருந்தாலும் 
தமிழனின்  குரல் 
உலக முழுதும் 
பிரபலம்..

1 கருத்து: