14 டிச., 2011

வெகுமதி மறதி...எனது நானூறு.




நேற்றைய கூட்டணிகள் 
வாய்ப்பேச்சு சண்டைகள்
வாக்குறுதிகள்...

தேர்தலுக்கு தேர்தல் 
அடங்கித்தான் போனது 
மறதிக்குள் 

உறவுகளின் 
மரணம் கூட 
மரணமாய் போகும் 
மறதிக்குள் 

வறுமைக்குள்
அதிர்ஷ்டம் அழைத்தால்
இருக்கும் வாழ்வு 
வாழ்ந்த வாழ்வை 
மறைக்கும் 
மறதிக்குள்...

மறதி மட்டும் 
மனிதனுக்குள் 
இல்லாமல் போனால் 
வாழ்க்கையே நரகம்...

நரகத்தை 
மாற்றித் தருவது 
மறதி...

விதியின் விலாசமும் 
இன்னல்களின் 
இம்சைகளும் 
இல்லமால் அழிக்கும்
மறதி...

தவறுக்குள் 
மதத்தை  நிறுத்தி 
வன்முறைக்குள் 
கொலையாகும் 
தீர்ப்புக்கு 

மனித நேயமாய் 
தன்னிலை சொல்லும் 
மறதி...

மறப்போம் 
மன்னிப்போம் 
வாழ்க்கையின் 
வெகுமதி 
மறதி...

1 கருத்து: