8 டிச., 2011

இல்லறம் எனபது நல்லறம்...


இல்லறம் எனபது 
நல்லறம்
இரு துருவங்களை 
ஈர்த்து
இல்வாழ்க்கையில்
இணைக்கும்...

இரவுகளும் 
பகலாய் மாற்றும் 
இருள்கள் நீக்கி
இன்பங்களை 
இனிக்க இனிக்க 
தந்து மகிழும் 

இருவரின் நெருக்கம்
ஒன்றாய் தொடங்கி
மூன்றாய் உருவாக்கி
புதிய தலை முறை 
தொடக்கம் 
இல்லறத்தில் மட்டுமே 
சாத்தியம்...

துறவுகள் தராததை 
உறவுகள் தந்து 
மகிழும்...

இறைவன் தந்த 
இல்வாழ்க்கை
இருப்பதை
கிடைப்பதைக் 
கொண்டு 
இணைத்து வாழ்ந்தால்
இவ்வுலத்திலும் 
சொர்க்கமுண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக