மாட்டின் கழுத்தில் சலங்கை மாட்டி
நாளும்
இசையோடு போனது ஒரு காலம்
அந்த நினைவுகள்
மறையாது ஒருக்காலம்!
எங்கள் தாத்தா
வண்டி ஓட்டிப் போகையிலே
சாட்டையை எடுத்து இடுவார்
ஓடும் சக்கரத்திலே
புதுச சந்தம்
தொடுப்பார் கடகடஎன்று
வரும் சத்தத்திலே
காளைகள் இரண்டும்
சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள்
எல்லாம் இறந்து போனது
தோட்டமும்,மாட்டு தொழுவமும்
அழிந்து போனது
இருந்த இடத்தில் யெல்லாம்
அடுக்குமாடி அடைத்துக்கொண்டது
நல்லக் காற்றுக் கூட
மரமில்லாமல் வாடிப் போகுது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக