17 நவ., 2011

மீண்டும் மிதிவண்டி எடுப்போம்...







நாம் 
மதித்து வந்த
மிதிவண்டி இன்று
ஓரங்கட்டப்பட்டது...


நல்ல தலைவர்கள் 
நடிகை முன்
தேர்தலில் 
தோற்றது போல

அக்கறையும்
அவசியமும் 
உடலுக்குள்
அடைக்கலம்
அறிந்தும் 
அலட்சியம்.

இயற்கை தந்த பரிசு 
ஓடாமல் 
ஒரே இடத்தில் 

கொழுப்புக்கள் 
கரைக்க  மட்டும்
பயன்படும்
பின் ஓரத்தில் ஒதுங்கும் .


சொந்த 
தொழிலுக்கு உறவாக்கி...
புதிய தொழிலை 
உருவாக்கி...
வாழ்வுக்கு உரமானது
இன்று ஓரமானது.

இளமைக்கு 
மீண்டும் மிதிவண்டி
பக்கம் நீ திருப்பு...

மீதமுள்ள வாழ்வை 
விரும்பி
இளமைக்கு இதை 
நம்பி 
மீதிவண்டியை 
மீண்டும்
தெருக்களில் ஓட்டி பழகு ...

எரிபொருளின் விலையை 
அறிந்து...
உன் நிலையை உணர்ந்து 
ஓட்டி வந்தால்
உன் உடலுக்கு அழகு
வருவதை பாரு...

இயற்கையோடு 
நீ மோதி 
மாசுபடாமல் 
ஒரு நகர்வலம்...
மீண்டும் மிதிவண்டி 
எடுத்து ஊர்வலம்...

உடல் நலம் சிறக்க
கூட்டத்தை குறைக்க
மீண்டும் நாம் 
மிதிவண்டியை எடுப்போம்...

மீதி உள்ள வாழ்க்கையை 
விதி மீறாமல் கடப்போம் 
உடல் நலம் காப்போம்!

===========================================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. nalla karuththai solli irukkinga annaa ,,try pannurom annaa

    பதிலளிநீக்கு
  2. நன்றி கலை ,உங்கள் வருகையும் அதன் தொடர்ந்து தங்கள் தரும் கருத்தும் ஊக்கமாய் எனக்கு இருக்கு .நன்றி நன்றி .

    பதிலளிநீக்கு