1 நவ., 2011

அதிகாலை கனவு...

ஏர் பிடித்த
கரங்கள் இன்று 
கவலைக்கும்
களைப்புக்கும்
கணினியோடு 
உடன்படிக்கை.

வயலும் வாழ்வும்
புதிய மாற்றம்.

விவசாயி விபரம் காண
கூகுளில் தேடும் நேரம்...

மீண்டும் சாகுபடி
நிலத்தில்.

கட்டப்பட்ட வீடுகள்
எல்லாம் இடிக்கப்பட்டு...

விளைச்சலுக்கு நிலமாய்
மாறுமோ என்ற அச்சத்தோடு 
விவசாயா மண்ணில் 
கட்டிய வீட்டு எஜமானர்கள்.

வாங்கிய மனைகள் 
விற்கமுடியாமல்
மனை வியாபாரிகள்.

காலம் மாறியது
விவசாயி நிறத்தோடு.

கண் விழித்தேன்
எல்லாம் கனவாய்...

அதிகாலை கனவு 
பலிக்குமா என்ற 
குழப்பத்தோடு...

எனது வேலைகள் 
தொடக்கம் கணினியோடு...

2 கருத்துகள்:

  1. ''...அதிகாலை கனவு
    பலிக்குமா என்ற
    குழப்பத்தோடு...''

    குளப்பம் தேவையில்லை. நிச்சயம் கனவு பலிக்கும். நல்ல கனவு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரியே.

    பதிலளிநீக்கு