பனித்துளி
பாதையில் விழுந்து
மடிந்தது.
உறவுக்கு பின்
நீர்த் துளி
கொட்டப்பட்டது
பல உயிர்த் துளிகள்
சுமக்கப்பட்டு
கலைக்கப்படும்
சில உயிர்கள்
பிறக்கப்பட்டும்
இரக்கமில்லாமல்
வீதியில் எறியப்படும்...
சுகம் ஒன்றே
வாழ்க்கையாய்
பிள்ளைகள் எல்லாம்
சுமையாய்...
தாய்மைக்கு
தரம் வேண்டும்
தரம் பார்த்து கருக்கள்
உண்டானால் தான்
பிள்ளைகளாய்
பிறக்கமுடியும்...
இங்கு கொலைக்கும்
அங்கீகாரம்
கரு கலைப்பு
என்ற பெயரில்...
மானம் காக்க
புது வாழக்கைக்காக
பல பிள்ளைகள்
நடு வீதியில்...
இப்படி இருந்தே
சொல்கிறோம்
நாம் மனிதர்கள் என்று.
இன்னும் நாம்
மிருகங்களிடமும்
பறவைகளிடமும்
படிக்க வேண்டியது
ஏராளாம்...
================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
மனம் கனத்தது.. கண்கள் கசிந்தது. படம் நெஞ்சைஅதிரச்செய்தது.. முடியல... சாட்டையாய் கவிதை வரிகள்..
பதிலளிநீக்குஉங்கள் ஊக்கமான வரிகளுக்கு நன்றி தோழியே .
பதிலளிநீக்குஐயோ அண்ணா என்னக் கொடுமை இது,,,,நெஞ்சு வழித்து கண்ணிர் வருது அண்ணா
பதிலளிநீக்குதங்கை கலையின் கருத்துக்கு நன்றி .
பதிலளிநீக்கு