தற்கொலைவாதிகளே
தற்கொலைக்கு என்ன அவசரம்
வாழ்க்கையை பாருங்கள்.
காதல் மட்டுமா வாழ்க்கை
சோகம் மட்டுமா நித்திலை
வறுமைக்கு பயந்தா
வாழக்கை
வேலைலில்லை என்ற சொல்லை,
சொல்வதா உன் வேலை
இது தானா உன்னிலை
இரைப்பைக்காக
கழிவுநீரை சுத்தம்
செய்கின்ற மனிதரை
கண் முன் நிறுத்து...
அனுதினம் காகிதம்
பொருக்கி வாழும்
மனிதர்களை
பார்த்தாவது
உன் பாதை மாற்று
காதல் காதல்
என்று சொல்வதை
அதில் அழிவதை
தடுத்து
உன்னால் முடியும்
வாழ்க்கை வாழ்வதின்
அர்த்தம் அறிந்துக்கொள்
நம்பிகையே சூரியன்.
உனக்கும் விடியல் உண்டு
உன் திசையை
கிழக்காய் மாற்று...
மேற்கில்
இருள் மறைந்து
வாழக்கைப்
பாதை அறிந்து
புதிய விடியல்
நம்பிக்கையாய்
உதிக்கும்...
=====================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக