வாத்தியார்:
இது என்னடா எல்லா பேப்பரிலும்
கடைசியா ஒரு வரி
லாலாக் கடை முட்டை சாப்பிடுங்க
பேப்பரை திருத்துங்க என்று இருக்கு...
மாணவன் :
லாலா முட்டை கடை எங்களுடையது
சும்மா விளம்பரத்துக்கு தான் சார்.
=============================
அப்பா :
டேய் இங்கே வா ,இது என்ன எல்லா பரிச்சையிலும்
சைபர் வாங்கி இருக்காய்?
மகன் :
அது சைபர் இல்லப்பா நம்மக் கடை முட்டை விளம்பரம்
அதை தான் இப்படி வாத்தியார் போட்டுயிருக்கார்..
================================
என்ன சார் முட்டைக் கடை ஓனரை போலிஸ் கைது பண்ணுது
நேற்று சின்ன பையன் அரசியல்வாதியை அடித்ததை
தனக்கு சாதகமாய் வதந்தியை பரப்பிவிட்டார்...
எப்படி ?
எங்க கடை முட்டை குடித்து தான் சின்ன பையன் அரசியல்வாதியை
அடித்தான் என்று சொல்லவும் அவர் கடை முட்டைக்கு ஏக
கிராக்கியா போச்சு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக