26 நவ., 2011

இருக்காது சரிசமம்...


பேருந்துகளிலும்
புகைவண்டியிலும்
ஒன்றாய் பயணிக்க...

மருத்துவமனையில்
ஒன்றாய் மருத்துவம்
பார்க்க..

ரத்தம் தானத்துக்கும்
உடல் கூறு  மாற்று
அறுவை சிகிச்சைக்கும்
சம்மதம்...

மதம் என்று வந்துவிட்டால்
பிடிவாதம்
வாக்குவாதம்...


மனித நேயம்
பேசும் சட்டமும்
மதத்தில்
வசிக்கும்
வாசிக்கும்


எரித்தும்
குண்டு வைத்து
நடத்தியும்
கொல்லும் மனம்

இருக்கும் வரை
இருக்காது
சரிசமம்...

2 கருத்துகள்:

  1. உண்மையே அண்ணா ..... என்று மாறும் இந்த நிலை என்று தெரிய வில்லை ...கவிதை எப்போதும் போல மிக அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  2. நன்றி தங்கையே...உங்கள் ஊக்கமான வரிகளும்,வருகையும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது

    பதிலளிநீக்கு