அதிகாலை
சோம்பலை முறித்து
கடலில் குளித்து
எழுந்த சூரியன்...
கைக்குட்டையாய்
மாறி...
ரோஜா மலருக்கு
பனி தந்த முத்தத்தின்
ஈரத்தை துடைத்து
தனது பயணத்தை
தொடர...
உலகத்தின் அவலத்தை
கண்டு
சினம் கொண்ட
கதிரவன்
வெப்பக் கடிதத்தை
வாசிக்க...
மக்கள் அவதியை
அறிந்து
பூமியின் அழைப்புக்கு
மாலை உறவாய்
உரு மாற...
பிறந்தாள்
குளிர் நிலவு...
கதிரவன் வெளிச்சத்தை
கடன்வாங்கி
புது உறவுக்கு
தூது சொல்ல...
============================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
பூமியின் அழைப்புக்கு மாலை உறவாய்உரு மாற...பிறந்தாள்குளிர் நிலவு...அருமை நண்பரே
பதிலளிநீக்கு