28 நவ., 2011

இனி ஒரு பிறவி ?


மனிதனாக பிறந்து
மரத்தை அழித்து
மழையை இழந்து,
உலகத்தை 
மாசுபடுத்தும்
நிலையில்...

நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா 
இனி ஒரு பிறவி 
என்ற கேள்விக்குறி...

தீவிரவாதத்தில்
தீவிர வாதத்தில்,
இணைந்து ,இணைத்து 
மனிதனே
மனிதனை  கொல்லும்
நிலை அறிந்தும்...

தடுக்க நிலை அறியாமல்
வேதனையில் நான்
மீண்டும் எனக்கு
வேண்டுமா 
இனி ஒரு பிறவி ?

மதம்,சாதி, என்றும்
மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற 
மனித மிருகத்தோடு
வேதனையோடு
விரக்தியோடு
வாழும் வகையில்
தடுக்க நிலை 
அறியாத நிலையில்
வேண்டுமா 
இனி ஒரு பிறவி 

துறவு தன்னை 
இழந்தநிலையில் 
துகிலுரிக்கும் 
ஆசாமி
நிலை அறிந்தும்...

பகல் வேடம் போடும் 
அரசியல்வாதிகளை
அறிந்தும்,புரிந்தும் 
வாய் திறக்க 
முடியவில்லை 
தடுக்க வழியில்லை 

தவறு என்று தெரிந்தும்
தேவைக்கு லஞ்சம் 
தரும் நிலையில்...

கட்டாயத்தோடு
நானுமிருந்தும்
தவறாய் போகும்
உலகம் கண்டு

கண்டும் ,காணமல்
ஒதுங்கும் நிலையை 
பார்த்து  கேட்கிறது மனம் 

ஒரு கேள்வி
வேண்டுமா 
இனி ஒரு பிறவி ?

5 கருத்துகள்:

  1. ''..ஒரு கேள்வி
    வேண்டுமா
    இனி ஒரு பிறவி ?...''
    நல்ல நியாயமான கேள்வி. ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டால் உலகம் திருந்திவிடுமே. வாழ்த்துகள். 2 கிழமை இடைவேளையின் பின் வருகிறேன் தொடருவோம்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. சுபெர்ப்.,,..எப்புடி சொன்னிங்க பாருங்க அண்ணா ,,,செமையா சொல்லிடிங்க .....தீவிரவாதாம் சொல்லாடல் அருமை அண்ணா ....மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய கவிதை ....நன்றிங்க அண்ணா நல்லதொரு கவி கொடுத்ததற்கு ..............

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் மகிழ்ச்சி.நன்றி நன்றி கோவை கவி அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. வழக்கமான பாராட்டுகளும் ,விமர்சனங்களும் எனக்கு ஊக்கமாய் என்றும் கலை .நன்றி நன்றி தங்கையே .

    பதிலளிநீக்கு
  5. வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
    நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
    http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

    பதிலளிநீக்கு