தந்தை தானே
முன் மாதிரியானவர்.
அழகான சிரித்த
முகத்துக்கு சொந்தக்காரர்!
சுறுசுருப்பின் சூத்திரம் அறிந்தவர்.
ஆர்பாட்டமில்லாத பேச்சுக்கும் ,
வெள்ளை நிற உடைக்கும்
பிள்ளை மனதுக்கும் முகவரியானவர்!
எனக்கு முன்மாதிரியானவர்
எங்கள் வம்சத்துக்கு
வான் மதியானவர்.
ஆணிவேரானவர்!
ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து !
ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை,
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை,
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை,
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.
தந்தையும் தாயாகலாம்,தாய்க்கும் தாயாகலாம்,
தந்தையே அதற்கு நீயே உதாரணமாகலாம்.
மண்ணறையில் சுகமாக,இறைவன் ஒளியில் நீ துயில,
மறுமைக்குள் மறுபிரவேசம் நடக்கும் வரை நீ உறங்க,
எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக,
தினம் தொழுது ,அழுது கேட்டுவருவேன்,உங்களுக்காக!
எனது தந்தையின் நினைவு நாள்,அன்று எழுதப்பட்ட கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக