15 அக்., 2011

ஊழல் ஊமையானது!





உண்மைகளை
உறவுகள் தோலுரிக்க,
ஊழல் இங்கு ஊன்றுகோலாய்
மாறியது!


ஊழல் செய்தவர்களும்,
ஊழல், ஊழல் என்று
போர்க்கொடி தூக்க...


பழைய ஊழல் ஊமையானது!
புது ஊழலோ ,பத்திரிக்கைக்கு
உறவானது ,புது செய்தியானது.


தட்டிக் கேட்க முடியாமல்,
தடுக்க வழியில்லாமல்
என் மனமும்,
இவர்களுக்கு ஓட்டுபோட்ட
எனது விரல்களும் ஊனமானது !



2 கருத்துகள்:

  1. உங்கள் கவிதையின் தலைப்பை ("ஊழல் ஊமையானது!")பார்த்ததும் அதிகம் எதிர்பார்த்தேன். இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து....

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கண்டு மகிழ்ந்தேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு