வருத்தத்தின் வர்த்தகம்,
வாழ்க்கையோடு
ஒன்றிப்போகும்!
விடியல் வந்துவிட்டால்
மறந்துப்போகும்,
மறைந்துப்போகும்.
மீண்டும் வருத்தத்தின்
அர்த்தம் சொல்லிப்போகும்,
பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.
நேற்றைய அரசில்யாவதிகள்
செய்ததும்,
இன்றைய அரசில்யாவதிகள்
செய்வதும்,
வருத்தம் கொள்ளச் செய்யும்,
அடுத்து, பெரிய வருத்தம் வந்துவிட்டால்
எல்லாம் அடங்கிப்போகும் .
நாளைய அரசில்யாவதிகள்
செய்யப்போவதும் ,
காணும் வருத்தம், என்ன செய்யும்.?
வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...
வரும் தலைமுறைக்கும்,
வருத்தம் வந்துப்போகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக