13 பிப்., 2010

எறும்போடு சில மணித்துளிகள்...



நாங்கள் 
வாழும் நாட்கள்
சில நாட்கள் தான்
கொலை செய்யாமல்
பார்த்துபோங்க 
என்ற குரல் கேட்ட 
திசை பார்த்தால் 
எறும்பு!

இது என்ன குறும்பு 
எறுபுக்குக்கூட
பேச தெரியுமா
என வியக்க !


என்ன வியப்பு
மொழியல்லா உயரினம்
உலகத்தில் இல்லை
உனக்கு தெரியாதா
என நகைத்தது
தனக்கே உண்டான 
மொழியில்...


இன்னும் சொல்கிறேன்
மனிதா!
கூட்டு வாழ்க்கை
கலைக்கபடாமல் இருப்பதும்
எங்களிடம்தான்.


கொடுத்து வாழும்
பழக்கமும் ,எங்களிடம்
இன்னுமிருக்கு!


யானையின் உருவம்
இல்லை,ஆனா
அதன் உருவத்தையின் 
அளவு அறிவுயிருக்கு
எங்களிடம்...


யானையின் காதுகளில்
நாங்கள் போனா என்ன
ஆகும், தெரியும் உனக்கு.


ஏதோ வலி அறிய
தூக்கம் கலைந்தது ,
அப்போது தான்
கண்டது கனவு என
மனது சொன்னது.


எறும்பே நீ ஒரு விந்தை
உன் அறிவு யானை .


2 கருத்துகள்: