காதல்
எது காதல் ?
காகிதம் முழுவதும்
பெயர் எழுதிவருவதா
காதல்.
கால் வலிக்க நின்று
அவள் வருகைக்கு
வரவேற்பு தருவதா
காதல்!
பள்ளிக்கு செல்லாமல்
அவள் துணைக்கு
சென்றுவருவதா
காதல் !
தானே வறுமையில் வாட
வாழ்த்து சொல்ல திருடுவதா
காதல்!
பெண்ணை கண்டவுடன்
வருவதா காதல்!
கொண்டகாதல்
வந்தவழி போனால்
அடுத்த காதல்
நாடுவதா காதல் !
காதல் என்பது
அன்பின் வழிபாடு
தாய்மையின் மனதோடு
தந்தையின் பாசத்தோடு
சகோதர்களின் பிணைப்போடு
சகோதரிகளின் இணைப்போடு
சொந்தகளின் துணையோடு
மனைவின் அரவணைப்போடு
மக்களின் சிரிப்போடு
கொள்வதே காதலின் வெளிப்பாடு
இதுதான் அன்பின் வழிபாடு
இல்லறத்தின் மொழியோடு
காதலை கொண்டாடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக