சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்.
சுட்டது யாரு என
தெரியா தவளைகள்.
பட்டென்று சொன்னால்
புரியாது
பட்டால் கூட
அறியாது .
திரையில் பார்த்த
அதிசியம்
ஓட்டு கேட்டுவந்தால்
துடித்திடும்.
சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,
கட்சி என்று வந்துவிட்டால்
சொந்தத்தை பார்க்காது ...
கொலை கூட செய்ய
தயங்காது.
சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,
எந்த கட்சிகாரனும்
நல்ல தலைவர்
யார் என கேட்டால்
காமராசு என
சொல்ல தயங்காது .
சொன்ன சொல்லை
நினைக்காது.
தன் தலைவனின்
பெயரை கூட
சொல்ல தோன்றது .
சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,
இன்னும் இவர்கள்
ஏழைகள்!
ஏணியாய் உள்ள
கோழைகள்.
எத்தனை முறை
தேர்தல் வந்தாலும்,
தோள் கொடுப்பார்கள்.
முடிந்தால் உயிரையும்
கொடுப்பார்கள்
சாக்கடை ஆகலாம்
சரக்கு கடை
திறந்துவிட்டால்
அதனையும் மறந்து போகலாம்.
சூது வாது தெரியா
தலைமுறைகள்,
இருக்கும்வரை
இது ஒரு தொடர்கதைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக