தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த மாபெரும் வெற்றி: நோயாளிகள் இந்த சட்டப்படி, மற்ற சட்டங்களை போலவே, மருத்துவர்களிடமிருந்து, தங்களது விரிவான சிகிச்சை ரிப்போர்ட் ஐ கேட்கலாம் என்பதே அது. மத்திய தகவல் ஆணையம், மருத்துவமனையின் பொது அதிகார அமைப்புக்கு, நோயாளிகளிகளுக்கும், அவரது உறவினர்களுக்கும் மெடிக்கல் ரெகார்டுகளை அவர்களது privacy மற்றும், ரகசியதன்மையை காக்கவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்ட Articles 21 மற்றும் 19 இன் படி, ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் விரிவான தகவலை பெற உரிமை உண்டு.அதாவது, அவருக்கு என்ன வைத்தியம் செய்யப்பட்டது, அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்டுகள்இன் ரிபோர்டுகள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரது முடிவுகள், நோயாளி ஏன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார், இன்ன பிற. மனுதாரர், பொருட்கள், சேவைகள் மற்றும் அவருக்குண்டான மருத்துவ சேவைகள் அனைத்தையும் குறித்து அவர் கேட்கலாம்.
அகில இந்திய மெடிக்கல் கவுன்சில், கடந்த 11.3.2002 இல், ஒரு சுற்றறிக்கை அனுப்பி, மெடிக்கல் ரெக்கார்டுகளை பராமரிக்கவேண்டும் என்றும், நோயாளிகள் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி உள்ளது.
நோயாளிகளோ, அனுமதிக்கப்பட்ட உதவியாளர்களோ, சட்ட வல்லுனர்களோ கேட்டால், நோயாளிகளது மருத்துவ குறிப்பை மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.
கேரளா உயர்நீதிமன்றமும், இதை வலியுறுத்தி உள்ளது. Rajappan Vs. Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology [ILR2004(2)Kerala150] : Appendix 3 இன் படி, அனைத்து ஆவணங்களோடு, நோயாளி அல்லது சிகிச்சை எடுத்து இறந்தவரின் உறவினர் கேட்டால், அவரது சிகிச்சை குறிப்பேட்டை கொடுக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 3 இன் படி, நோயாளிக்கு அவரது சிகிச்சை குறிப்பேடு தரப்பட வேண்டும். நோயாளி மருத்துவமனையில் தங்க மறுத்து, சிகிச்சை குறிப்பேட்டை கேட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டதில் சொல்லப்பட்ட, வாழ்வுரிமை மற்றும் அவரது சுதந்திரத்தின் படி, அவருக்கு உரிமை உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு, 8 (1)(h) இன் படி, மருத்துவ ஆதாரங்களை கொடுத்தால், புலன் விசாரணையை பாதிக்கும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் பொதுவாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
The case citation can be read here: Ms.Nisha Priya Bhatia Vs. Institute of HB&AS, GNCTD, File No.CIC/AD/A/2013/ 001681SA dated 23-07-2014. நன்றி : RTI INDIA
இந்திய அரசியலமைப்பு சட்ட Articles 21 மற்றும் 19 இன் படி, ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் விரிவான தகவலை பெற உரிமை உண்டு.அதாவது, அவருக்கு என்ன வைத்தியம் செய்யப்பட்டது, அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்டுகள்இன் ரிபோர்டுகள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரது முடிவுகள், நோயாளி ஏன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார், இன்ன பிற. மனுதாரர், பொருட்கள், சேவைகள் மற்றும் அவருக்குண்டான மருத்துவ சேவைகள் அனைத்தையும் குறித்து அவர் கேட்கலாம்.
அகில இந்திய மெடிக்கல் கவுன்சில், கடந்த 11.3.2002 இல், ஒரு சுற்றறிக்கை அனுப்பி, மெடிக்கல் ரெக்கார்டுகளை பராமரிக்கவேண்டும் என்றும், நோயாளிகள் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி உள்ளது.
நோயாளிகளோ, அனுமதிக்கப்பட்ட உதவியாளர்களோ, சட்ட வல்லுனர்களோ கேட்டால், நோயாளிகளது மருத்துவ குறிப்பை மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.
கேரளா உயர்நீதிமன்றமும், இதை வலியுறுத்தி உள்ளது. Rajappan Vs. Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology [ILR2004(2)Kerala150] : Appendix 3 இன் படி, அனைத்து ஆவணங்களோடு, நோயாளி அல்லது சிகிச்சை எடுத்து இறந்தவரின் உறவினர் கேட்டால், அவரது சிகிச்சை குறிப்பேட்டை கொடுக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 3 இன் படி, நோயாளிக்கு அவரது சிகிச்சை குறிப்பேடு தரப்பட வேண்டும். நோயாளி மருத்துவமனையில் தங்க மறுத்து, சிகிச்சை குறிப்பேட்டை கேட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டதில் சொல்லப்பட்ட, வாழ்வுரிமை மற்றும் அவரது சுதந்திரத்தின் படி, அவருக்கு உரிமை உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு, 8 (1)(h) இன் படி, மருத்துவ ஆதாரங்களை கொடுத்தால், புலன் விசாரணையை பாதிக்கும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் பொதுவாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
The case citation can be read here: Ms.Nisha Priya Bhatia Vs. Institute of HB&AS, GNCTD, File No.CIC/AD/A/2013/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக