மும்பை:"கடந்த 2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் கலாம் தெரிவித்திருப்பது கபட நாடகமாடும் செயல்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், "டர்னிங் பாயின்ட்' என்ற தன் புதிய புத்தகத்தில், "2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், சோனியா பிரதமராக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், சோனியா கேட்டிருந்தால், அவரை பிரதமராக்கியிருப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிவசேனா கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில், பால் தாக்கரே கூறியுள்ளதாவது:
கபட நாடகம்:சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, அப்துல் கலாம் தெரிவித்திருப்பதன் மூலம், அவர் நகைப்புக்கு இடமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், அவர் இதைத் தெரிவித்திருப்பதன் மூலம், மக்களின் மனதில் அவர் பிடித்திருந்த இடத்தை இழந்து விட்டார். மக்களின் பார்வையில் அவரின் செயல் கபட நாடகமாகியுள்ளது.சோனியா பிரதமராவதை தடுத்து நிறுத்தியவர் கலாம் தான் என்ற தகவல், இதுநாள் வரை மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தது. இதற்காக நாடு அவரை பாராட்டிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னரும், இதற்காக அவரை பலர் புகழ்ந்து கொண்டிருந்தனர். "சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, இப்போது தெரிவித்திருப்பதை, கலாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சுயநலம் காரணமாக அமைதியாக இருந்து விட்டார்.
சந்தேகம்:அப்துல் கலாம், பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனை கூட நாட்டிற்கு பலன் தரவில்லை. ஆனால், சோனியா பற்றி அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவல், உலக அளவில் இந்தியாவின் கவுரவத்தை பாழ்படுத்தி விட்டது. கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் விரும்பின. அப்படி அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, இந்த தகவலை வெளியிட்டிருந்தால், அது தேசிய ஜனநாயக கூட்டணியை அவமானப்படுத்தும் செயலாகி விடும். இப்போதைய சம்பவங்களை பார்க்கும் போது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடக்க உண்மையிலேயே கலாம் தான் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு தாக்கரே கூறியுள்ளார்.
ஜூலை 13ல் பிரணாப்பை சந்திக்கிறார்:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு தெரிவித்ததற்கு, நன்றி கூறுவதற்காக, சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வரும் 13ம் தேதி பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசுகிறார்."இருவரின் சந்திப்பு நிச்சயம் நிகழும்' என, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் சிவசேனா இருந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு பால் தாக்கரே ஆதரவு தெரிவித்தது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அத்துடன், "மன்மோகன் சிங் அரசில் பிரணாப் ஒரு சூப்பர் பவர். அவர் ஜனாதிபதியாவதால், மத்திய அரசு நொண்டி வாத்தாகி விடும்' என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமலர்
பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது.
சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை’’ என்றார் கலாம்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது.
சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை’’ என்றார் கலாம்.
நன்றி நக்கீரன்...
இந்தியனாய் இருந்தால் இல்லை வாழ்ந்தால்,அதற்கு உண்டான அடிப்படை
பெற்றால் தானே இந்திய தேர்தலில் நிற்க முடியும்...
திருமதி சோனியா அது போல காட்டிதானே நின்று வெற்றி பெற்று இன்று
பாராளும் மன்ற உறுப்பினராய் உள்ளார்
இந்த தேர்வை மக்கள் தான் தேர்ந்தேடுத்து அவரை பாராளும் மன்ற உறுப்பினராய் தேர்ந்தேடுத்து உள்ளார்கள்...
அரசியல் பேச்சிக்கு காலம் மாற்றத்திற்கு பேசலாம் என்று தான் இன்றைய நிலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக