4 ஜூன், 2012

தபாலின் நிலை!தபால்!
நேற்று வரை என்
மதிப்புக்குரிய உறவுமுறை...


தபால் வரும் வரை
தூக்கமில்லை
இந்த நிலை அன்று 
மலர்ந்தமுல்லை...


தலை முறை
மாற்றிய லீலை,
இன்றோ அவலநிலை...


கேட்பாரில்லை
பார்ப்பதுமில்லை
படிக்க நேரமில்லை
எழுத தோன்றவில்லை 
தபாலுமில்லை!


கணினி வந்த வேளை,
வேலையோடு வேலை
எழுதுவதும் 
பார்ப்பதும்
பேசுவதும் 
எங்கள் வேலை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக