21 ஜூன், 2012

இன்று உலக அகதிகள் தினம்

இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரம் , உள்நாட்டு போர் ஆகிய காரணங்களால் அங்கு வாழும் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும் போதோ, இனகலவரம் ஏற்படும் போதோ முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். இவர்கள் அகதிகளாக இடம் பெயருகின்றனர்.

ஆப்ரிக்கா நாடுகள் அதிகம்: அந்த வகையில் முதன்முதலாக ஆப்ரிக்க கண்டத்தில் தான் முதன்முதலாக ஜூன் 20-ம் தேதி அகதிகள் தினமாக அணுசரிக்கப்பட்டது. ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள 50-ம் ‌மேற்பட்ட நாடுகளில் சோமாலியா, எத்தியேபியா போன்ற நாடுகளில் பசி, பஞ்சம், பட்டினி போன்றவை தலைவிரித்தாடுகின்றன. சில நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் அங்குள்ள மக்களை பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர வைத்துள்ளது. போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் காலரா, மலேரியா போன்ற நோய்களுக்கு பயந்தும் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள கொடிய சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பல்வேறு காரணங்களால் இடம் பெயரும் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தான் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு சார்பில் ஓவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

சமீபத்தில் வங்‌கதேசம், மியான்மரில் நடந்த இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக மியான்மரில் குடியேற முயன்ற போது அவர்களுக்கு அடைகலம் கொடுக்க மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் 2லட்சம் அகதிகள்: சர்வதேச அகதிகள் தினத்‌‌தையொட்டி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2011-ம் ஆண்டில் உலக முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவற்றில் ஆசிய நாடான இந்தியாவில் ,பக்கத்துநாடான இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் தான் 2 லட்சம் அகதிகளாக வந்துள்ளனர். தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

தற்போது ஐ.நா. மனித உரிமை அமைப்பு, உலக அகதிகள் தினமான இன்று புதிய பிரசாரத்தினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் கூறுகையில், வாழ வழியில்லாத காரணத்தால் தான் அவர்கள் அகதிகளாக ‌இடம் பெயர்கின்றனர். அதிகரித்து வரும் அகதிக‌ளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட நாடுகளின் ‌அரசியல் ரீதியான முரண்பாடுகளை களைய தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்...

வல்லரசுகளின் கையில் 
இன்று உலக நாடுகள் 
உருமாறிய நிலையில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக