3 ஏப்., 2012

காற்றின் அவதாரம்...


கோபத்தில்  வெயில் 
ஆறுதல் சொல்லியது 
காற்று...


தண்ணீரோடு கோபம் 
சினம் கொண்டது 
காற்று...


மழைத்துளியின் பாட்டுக்கு 
பின்னணி இசையாய்
காற்று...


மரத்தோடு எழுதிய 
புதுக்கவிதை 
தென்றல்...


மழைக்கு எழுதிய 
மரபுக் கவிதை 
புயல் 


கடலோடு எழுதிய 
புரட்சிக் கவிதை 
சுனாமி...


தென்றாலாய்,புயலாய் 
அவதாரம் 
காற்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக