10 ஏப்., 2012

உன் கையை மூலதனமாக்கு...




தேவதையே!
உன் தேவைக்கு 
கை நீட்டும் நிலை 
மறந்தால் உணர்வாய்
உழைத்தால் உயர்வாய்!



தானம் வாங்குவதை 
அவமனாமாய் நினைத்து 
கையேந்தும் நிலை விட்டு 
உன் கையை மூலதனமாக்கு...


உன் விரல்களும் வழிச் சொல்லும்,
புது விடிகள் பிறக்கும்.
தடைகள் வரும் கவலை விடு,
விடைகள் அறிய விண்ணப்பமிடு!
நீயே உனக்கு ஏணி,
அறிந்தால் இல்லை வேலி!

2 கருத்துகள்:

  1. நல்லதொரு தன்னம்பிக்கைக் கவிதை.கையேந்துபவர்கள் கையேந்தாமல் தங்கள் வாழ்க்கைக்கு முயற்சி செய்வதில்லை.பழகிவிட்டார்கள் கையேந்தலை !

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரி உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும்

    பதிலளிநீக்கு