படைப்பு ஐநூறு
ஊடல் கொள்ளும்
காதலே..
உணர்ச்சிகளின்
தொகுப்பு
தொகுப்புகள்
நடத்தும் வகுப்பு
அதன் பின்னே
முன்னுரைக்கும்
காமத்தின்
கிளுகிளுப்பு
உறவுகளின்
புவி ஈர்ப்பு
உண்டாக்கும்
படபடப்பு!
முத்தத்தில்
நுழைந்து
தழுவலில்
இணைந்து
அறிந்து
மகிழ்ந்து
புணரும்
ஊடலோடு
காணும் இன்பம்
உண்மை
இரு இதயங்களின்
பிரதிபலிப்பு...
பெற்றோர்களாய்
தாத்தா
பாட்டியாய்
மறுபிறப்பு
இதுவே
இல்லறத்தின்
மாண்பு...
''...பெற்றோர்களாய்
பதிலளிநீக்குதாத்தா
பாட்டியாய்
மறுபிறப்பு
இதுவே
இல்லறத்தின்
மாண்பு..''
.ஐநூறிற்க்கு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி
பதிலளிநீக்கு