தோழனே வருக
உன் தோழன்மையை
இனிதே தருக
நண்பனே நலமுடன்
வருக
நன்மைகள் தருக...
மனித நேயம்
மலர
மன்னவனே வருக
உன் ஆட்சியில்
இல்லாமை இல்லாமல்
போக்குக...
மதவெறிகள்
ஜாதி வெறிகள்
இல்லாத உலகமாய்
மாற்றுக...
எல்லோரும் ஒன்று
என்பதே நன்று
கூடி வாழும்
வாழ்க்கைக் கொண்டு
வாழ வகை தந்து
இல்லம் மகிழ
பெற்றோர்கள் போற்ற
உறவுகள் வாழ்த்த
ஊரார் புகழும்
வாழ்கையை தருக...
புத்தாண்டு தோழனே வருக...
''...தோழனே வருக
பதிலளிநீக்குஉன் தோழன்மையை
இனிதே தருக..''
வழ்த்துகளுடன் நீங்கள், நாங்கள் எண்ணுபவைகளை புத்தாண்டு தரட்டும் என இறைவனை வேண்டுவோம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நன்றி உங்கள் வாழ்த்துக்கும் எண்ணத்துக்கும் .
பதிலளிநீக்கு