அப்பாவின்
இறப்புக்கு பின்
விதவையின்
விலாசத்தை
மாற்றாமல்
எனக்காக
வாழ்ந்தவள்.
உன் அன்புக்கு
அடிபணிந்தே
ஒப்புக்கொண்டேன்
பார்க்காமலே
என் இல்வாழ்கையை.
நம் நம்பிக்கை
மாறி தான் போனது.
என் முன் நீயும்,
உன் முன் நானும்
அவமானம் படாமல்
நாம் வாழ
ஒப்புக்கொண்டாய்
முதியோர் இல்லத்தில்
நீ வாழ...
சொல்லமுடியா
சூழ்நிலையில்
திருத்த முடியா
நிலையில்
நான்
இருப்பதால்
எனக்கு மட்டும் தான்
தெரியும்
என்
பாசத்தை காட்ட
உன் பாசத்தோடு
நான் வாழ
சூழ்ச்சி செய்தது...
இன்றும் நான்
உன் மகனாய்
அலுவலக
மதிய இடைவெளியில்
நீ ஊட்டி விடும்
சாதத்தில் மகிழ்கிறேன்...
உண்மை தான் அண்ணா ....எல்லாப் பெண்களும் மாமியார் ஆவாங்க என்பதை மறந்து சிலப் பெண்கள் இருக்கத்தான் செய்றாங்க ...கவிதை அருமை அண்ணா
பதிலளிநீக்குஉங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கலை...
பதிலளிநீக்குஓடமும் வண்டியிலேறும் வண்டியுமோடத்திலேரும் ஒருநாள் என்பது புரியாமல்............
பதிலளிநீக்கு