இலவசம் தருவதாய்
கரை வேட்டிகளுடன்
உடன்படிக்கை
பொதுமக்கள் தந்தனர்
வெற்றிக்
காணிக்கை.
நேற்றைய ஆட்சிகளின்
விலைவாசி உயர்வு
பேசப்பட்டது மேடையில்
வெற்றிக்கு பின்
திருத்தத்துடன்
செயல்படுத்தப்பட்டது
எங்கள் வாழ்க்கையில்...
நேற்றும் இன்றும்
எதிர்க் கட்சிகள் மீது
குறைகளாய்...
வரிகள் மட்டும்
எங்கள் மீது
மொத்தமாய்..
கூட்டிக் கழித்து
பார்த்தால்
இலவசப் பொருள்கள்
விலையோடு அதிகமாய்
இலசவம்
நாங்கள் பணம்
கொடுத்து வாங்கிய
பொருளாய்...
பொது மக்கள்
ஏமாற்ந்த நிலையில்
வரிகளை சுமக்கும்
அப்பாவியாய்....
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
ஸலாம் சகோ.களை நிலா,
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் செமை வரிகள்.
வ அலைக்கும் சலாம் தோழரே,உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவலிமிகு கவிதை
பதிலளிநீக்கு//இலசவம்
நாங்கள் பணம்
கொடுத்து வாங்கிய
பொருளாய்...//
எதார்த்தம்
நன்றி தோழரே!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
பதிலளிநீக்குunmai annaa ...
பதிலளிநீக்குsema lines ellamae