23 பிப்., 2014

உழைப்பு..!

தள்ளாடும் வயதும் 
தடுமாறாமல் 
தடம் மாறாமல் 
காப்பாற்றும்...!

உழைக்க தெரிந்தால் 
போதும் 
இளமை உன்னை தேடி
ஓடி வரும்...!

19 பிப்., 2014

மண்ணுக்குள் கவிதை ...

மண்ணுக்குள் கவிதை 
படமாய் மாறிய
வித்தை...

எண்ணத்தை எழுதும்
விரல்களின் 
விஸ்வரூபம்...!

4 பிப்., 2014

தேநீர்

தேயிலை பொடியுடன் 
பாலை கலந்து 
இனிப்பை திணித்த
பானம்...

காலையில் பருகினால் 

சுகம்...
எங்கள் பண்பாட்டின் 
ஒரு அங்கம்...

தெருவோரம் 

இருக்கும் கடையில் 
கிடைக்கும்

பல நேரத்தில்

உணவே இதுவாகும் 
தேநீர் எங்களுக்கு
சுவை குடிநீராகும்..

விவசாயி...

விதைத்து பார்த்து 
விடை கிடைக்கவில்லை 
விற்று பார்த்து 
வியந்து போனான் 
விவசாயி...

2 பிப்., 2014

தேடலில்...

தேடலில் அறிந்தேன் 
ரசனையை 
ரசனையில் அறிந்தேன் 
உன்னை 
உன்னை நான் அறிய 
என்ன செய்யவேண்டும்...

சிநேகம் கொண்டவனும் ....

உறவுகள் ஊனமாய் 
போனாலும் 
உன்னத நட்பு 
தோள் கொடுக்கும்...

சிரிக்க தெரிந்தவன் 
சிநேகம் கொண்டவனும் 
சிங்கமாய் வாழலாம்...

உணர்வுகள்...











உனது பெயரை
உன் நினைவுகளை
சொல்லும் தானியங்கி 
என் உணர்வுகள்...