கூக்குரல் கேட்டு
தூக்கம் கலைத்தேன்
தண்ணீர் வண்டி
வந்ததால்
வாசல்தேடி ஓட்டம்...
யாரு விட்ட சாபம்
தண்ணீருக்கு
இன்னும் கையேந்தும்
நிலை....
இந்தியன் என
சொல்வதால்
தமிழனை அந்நியன்
என்கிறான்...
அமைதியாய் போவதால்
அலட்சியம் செய்கிறான்
அவமானம் படுத்துகிறான்
தண்ணீருக்கு
குரல் கொடுத்தால்
எல்லையில் நின்று
அசிங்கப்படுத்துகிறான்...
முல்லையின்
முகவரி மாற்ற
முயலும் செயலுக்கு
குரல் கொடு...
முல்லைக்கு
தேர்க்கொடுத்தான்
பாரிவள்ளல்
முல்லையை
தாரை வார்க்காமல்
பார்த்துக்கொள்
தமிழனாய்
இணைத்துக்கொள்
வழக்கம்போல
அறிக்கை மட்டும்
வாசித்து விட்டு
அகன்று விடாமல்...
அரசியல்வாதிகளே
இணைந்துக்கொள்ளுங்கள்
உங்களை நம்பித்தான்
வாக்கை போட்டோம்...
தமிழ் நாடு
சகாரா பாலைவனமாய்
மாறாமல் காக்க
தமிழ் நாட்டை
எண்ணியப் படி
தமிழன் என்ற
உணர்வுப்படி
வெற்றியை
நினைத்தப்படி...
ஒரு படி
முன்னேறி
உன் கையை
சேர்த்துப் பிடி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக